ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
இதனயைடுத்து ஒகேனக்கல் காவிரி ஆறறில் நேற்றைய நிலவரப்படி 22 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று 25 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.