விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலையில் சுற்றுத்திரிந்த 5-க்கும் மேற்பட்ட யானைகளை ட்ரோன்கள் மூலம் கண்காணித்து வனத்துறையினர் விரட்டினர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து 5க்கும் மேற்பட்ட யானைகள், கீழே இறங்கி வந்தன. அவை செண்பகத்தோப்பு சாலையில நின்றுகொண்டிருந்தை கண்ட சிலர், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் ட்ரோன்கள் மூலம் யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும், யானை நடமாட்டம் உள்ள செண்பகத்தோப்பு சாலையை பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தினர்.