கூவம் ஆறு மறுசீரமைப்பு திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - கார்த்தி சிதம்பரம் எம்.பி கடிதம்!
Sep 12, 2026, 03:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கூவம் ஆறு மறுசீரமைப்பு திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – கார்த்தி சிதம்பரம் எம்.பி கடிதம்!

Murugesan M by Murugesan M
Sep 1, 2024, 03:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கூவம் ஆறு மறுசீரமைப்பு திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என சென்னை மேயர் பிரியாவுக்கு சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம்  கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து , அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது : கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கூவம் ஆறு குறிப்பிடத்தக்க மாசுபாட்டுக்கு உள்ளாகியுள்ளது. கடந்த கால அறிக்கைகள் ஆபத்தான மோசமான நீரின் தரத்தை வெளிப்படுத்துகின்றன. கூவம் நதியை சீரமைக்க மாநில அரசு ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், ஏற்கெனவே ரூ.329 கோடி செலவிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் மண்டலத் தலைவருக்கு நீங்கள் அளித்த பதிலில், அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து தொழில்நுட்ப உதவி மற்றும் நிதி வழங்குதல் உட்பட நடந்து கொண்டிருக்கும் பணிகளை குறிப்பிட்டுள்ளீர்கள். இருப்பினும், இந்த முயற்சிகள் குறித்து தெளிவு இல்லாமல் உள்ளது.

எனவே, சென்னை நதிகள் மறு சீரமைப்பு அறக்கட்டளையானது, கூவம் ஆற்றின் மறுசீரமைப்புக்காக இன்று வரை மேற்கொள்ளப்பட்ட அனைத்து திட்டங்கள் மற்றும் அவற்றை விவரிக்கும் ஒரு விரிவான வெள்ளை அறிக்கையை வெளியிடக் கோருகிறேன்.

அதில், அனைத்து மறுசீரமைப்பு திட்டங்களின் சுருக்கம், ஒவ்வொரு திட்டத்தின் விளக்கம், அதன் குறிக் கோள்கள், காலக்கெடு, செலவுகள், விளைவுகள் உட்பட ஒவ்வொருதிட்டத்தின் விரிவான கணக்கை தெரிவிக்க வேண்டும். இத்திட்டத்தின் தற்போதைய சவால்கள், ஆற்றின் நிலை, திட்டமிடப்பட்ட மற்றும் உண்மையான விளைவுகளுக்கு இடையே உள்ள முரண்பாடுகள் பற்றி தெரிவிக்க வேண்டும்.

தற்போது, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற் றல் வாரியம் உட்பட சென்னையின் நீர்நிலைகளில் தினமும் விடப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரில் கிட்டத் தட்ட 30 சதவீதம் கூவம் ஆற்றில் கலக்கிறது.

சுத்திகரிக்கப்படாத கழிவுநீரில் சுமார் 60 சதவீதம் பக்கிங்ஹாம் கால்வாயில் பாய்கிறது, மீதி அடையாறு ஆற்றுக்கு செல்கிறது. பக்கிங்ஹாம் கால்வாய், கடற்கரைக்கு இணையாக செல்லும் ஒரு பெரியகால்வாய், சென்னைநகரின் நீர் வாழ் சூழலை வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது.

இருப்பினும், இந்த ஏரிகள், ஆறுகளில் திடக்கழிவுகள் மற்றும் கழிவு நீரை திறந்து விடுவதன் மூலம் துஷ் பிரயோகம் செய்யப்படுகின்றன. எனவே, அடையாறு சிற்றோடையின் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு (58 ஏக்கர்), அடையாறு சிற்றோடை மற்றும் முகத்துவாரத்தின் சுற்றுச் சூழல் மறுசீரமைப்பு (300 ஏக்கர்), ஒருங்கிணைந்த கூவம் நதி சுற்றுச் சூழல் மறுசீரமைப்பு திட்டம் ஆகிய வற்றின் தற்போதைய நிலையை தெரிவிக்க வேண்டும் என கார்த்தி சிதம்பரம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: Sivagangai MP Karthi ChidambaramChennai Mayor PriyaKoovam river restoration projects.chennai Koovam river
Share
Tweet
SendShare
Previous Post

ஏர் இந்தியாவுடன் இணையும் விஸ்தாரா – பங்குகளை வாங்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்!

Next Post

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலையில் சுற்றுத்திரியும் யானைகள் – பொதுமக்கள் அச்சம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies