மகாராஷ்டிரா மாநிலம் மால்வானில் சத்ரபதி சிவாஜி சிலை சேதமடைந்ததை கண்டித்து காங்கிரஸ், சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், அவர்களுக்கு பதிலடியாக பாஜகவும் போராட்டத்தில் ஈடுபட்டது.
மால்வானில் சத்ரபதி சிவாஜி சிலை கீழே விழுந்து சேதமடைந்தது. இந்த விவகாரத்தில் மகாராஷ்டிரா மாநில சிவசேனா ஷிண்டே பிரிவு மற்றும் பாஜக அரசைக் கண்டித்து மகா விகாஸ் அகாடி என்ற சிவசேனா உத்தவ் பிரிவு மற்றும் காங்கிரஸ் சார்பில் மும்பையில் போராட்டம் நடைபெற்றது.
இதற்கு பதிலடியாக மும்பை தாதரில் மகா விகாஸ் அகாடி கூட்டணியை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆடல், பாடலுடன் பாஜகவினர் நடத்திய ஆர்ப்பாட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.