ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து எதுவும் தெரியாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 171 -வது திரைப்படமான கூலி படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்றது. இதில் பங்கேற்க கடந்த 26 -ஆம் தேதி விஜயவாடா சென்ற ரஜினிகாந்த், ஐந்து நாள் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.
அப்போது, போயஸ்கார்டனில் உள்ள தனதுவீட்டின் அருகே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினி, “வேட்டையன் படத்திற்காக நடிகர் சூர்யாவின் கங்குவார் திரைப்படத்தை தள்ளி வைத்த அவரது பெருந்தன்மைக்கு நன்றி தெரிவித்தார். சென்னையில் ஃபார்முலா கார் பந்தயத்தை பார்க்க நேரம் இல்லை எனவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.