ஆந்திராவில் பெய்துவரும் கனமழை காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லவிருந்த 7 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கனமழை பெய்துவருகிறது.
இதனால், அங்கு பெரும்பாலான தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று பிற மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய 7 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.