ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்றால் தூக்கி கொண்டாடும் தமிழக அரசு கடந்த 20 ஆண்டுகளாக நிர்க்கதியாக நிற்கும் உடற்கல்வி ஆசிரியர்கள் மீதும் கவனம் செலுத்த வேண்டும் என கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், பதவி மூப்பு உடற்கல்வி ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பதவி மூப்பு அடிப்படையில் பணி தருவதாக கூறிய நிலையில், இதுவரை உடற்கல்வி ஆசிரியர்களுக்கான அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினார்.
அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக உடற்கல்வி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.