தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு நடிகர் நிவின் பாலி மறுப்பு தெரிவித்துள்ளார்.
மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக கேரள அரசு ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்டது.
அனைத்து மொழி சினிமா துறையிலும் ஹேமா கமிட்டி பெரும் பேசுபொருளானது. இதனையடுத்து, மலையாள நடிகைகள் பலர் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நிவின் பாலி, இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்ல இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.