பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டினார்.
பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
அந்த வகையில், யோகேஷ் கதுனியா, சுமித் அன்டில், ஷீதல் தேவி மற்றும் ராகேஷ் குமார் ஆகியோரை புருனேயில் இருந்தவாறு பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தினார்.