நடப்பு நிதியாண்டுக்கான இந்திய பொருளாதர வளர்ச்சி 7 சதவீத்தை எட்டும் என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.
உலகின் மிக வேகமான வளர்ச்சி காணும் பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளது. வேலை வாய்ப்பு சந்தை மேம்பட்டுள்ளது மற்றும் வலுவான சேவை வர்த்தகம் காரணமாக இந்தியா 2023-24 நிதியாண்டில் 8 புள்ளி 2 சதவீத பொருளாதார வளர்ச்சியை தக்க வைத்தது.
நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 6 புள்ளி 6 சதவீதமாக இருக்கும் என முந்தைய மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்ட நிலையில் அது தற்போது 7 சதவீதத்தை எட்டும் என உலக வங்கி உயர்த்தி மதிப்பிட்டுள்ளது.
பணவீக்கம் குறைந்து வரும் நிலையில் வலுவான பொருளாதார வளர்ச்சி வறுமையின் தீவிரத்தன்மையை குறைக்க உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளது. பொது உள்கட்டமைப்பு முதலீடு, ரியல் எஸ்டேட் துறை முதலீடு நாட்டில் அதிகரித்துள்ளது. அதேநேரம், உற்பத்தி துறையின் வளர்ச்சியும் 9.9 சதவீதமாக உள்ளது.