புதுச்சேரியில் நாளை கோட் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், காலை சிறப்பு காட்சிக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார்.
காலை சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்குமாறு திரையரங்க உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இந்த நிலையில், சிறப்பு காட்சிக்கு நாளை முதல் 8ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு 5 காட்சிகள் திரையிட ஆட்சியர் குலோத்துங்கன் அனுமதி அளித்துள்ளார்.
மேலும் காலை 9-மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட உள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.