பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாரீஸில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ஏராளமான வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள நிலையில், சேலத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.
இவரின் இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், தமிழகமும், பாரதமும் பெருமையடைகிறது எனவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதே போல உயரம் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீரர் ஷரத்குமாருக்கும், வெண்கலம் வென்ற வீராங்கனை தீப்தி ஜீவன்ஜிக்கும் வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.