விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் அரசு கல்லூரியில் அடிப்படை வசதிகள் கேட்டும், அக்கல்லூரி முதல்வரை கண்டித்தும், மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
திண்டிவனத்தில் உள்ள கோவிந்தசாமி அரசுக்கல்லூரி முழுநேரம் செயல்பட்டு வருவதால் வகுப்பறையில் போதிய இடம் இல்லை எனவும், ஷிப்ட் முறை கொண்டுவர வேண்டும் எனவும் மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்த கல்லூரி முதல்வரை கண்டித்து, மாணவர்கள் மற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.