நெல்லை மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவுலை தடுக்க ஆபரேஷன் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
2008ஆம் ஆண்டு மும்பையில் கடல் வழியாக புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள், காவல் துறையினர் கொல்லப்பட்டனர்.
இதனை தொடர்ந்து, கடலோர பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் ‘சாகர் கவாச்’ எனப்படும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நெல்லை மாவட்டம் கூடன்குளம், கூத்தன்குழி, தாமஸ் மண்டபம் பகுதிகளில் ஆபரேஷன் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.