தென்காசி மாவட்டம், திருமலையப்பபுரத்தில் அபாயகரமாக உள்ள சாலையை சீரமைக்க அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.
அம்பாசமுத்திரம் சாலையில் நான்கு சாலைகள் பிரியும் பகுதி உள்ளது. இதில் ஒரு சாலையின் மேடு அதிகமாக உள்ளதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் உள்ளதாகவும், பள்ளம் ஏற்பட்டதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அப்பகுதியினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் நிலை தடுமாறி கீழே விழும் சிசிடிவி காட்சி வெளியாகியது. நல்வாய்ப்பாக வாகனங்கள் வராததால் அவர்கள் காயங்களின்றி தப்பினர்.