விஜயின் கட்சிக்கும் காட்சிக்கும் தடை விதிக்கும் திமுக! - தமிழிசை சௌந்தரராஜன்
Sep 1, 2025, 03:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஜயின் கட்சிக்கும் காட்சிக்கும் தடை விதிக்கும் திமுக! – தமிழிசை சௌந்தரராஜன்

Web Desk by Web Desk
Sep 4, 2024, 06:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பி.எம்.ஸ்ரீ திட்டம் குறித்து தவறான கருத்துக்களை தமிழக அரசு பரப்புகிறது  என்றும்  தமிழகத்தில் பெண் காவல்துறை அதிகாரிக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது எனத் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தமிழக முதலமைச்சர் வெளிநாடு சென்று இருக்கிறார். சைக்கிள் ஓட்டுவதும் போஸ் கொடுப்பதுமாக இருக்கிறாரே தவிர பெரிய அளவில் செயல் இல்லை. அந்நிய நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு முதலீடு வருகிறது என்றால் அது பிரதமர் வெளிநாடுகளுக்கு சென்று தேசத்தை பற்றி நல்ல எண்ணம் ஏற்படுத்தியதால் தான்.

தமிழக அரசு பி எம் ஸ்ரீ திட்டம் குறித்து மத்திய அரசினால் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்ற தவறான கருத்தை பதிவு செய்து வருகிறார்கள்.

பள்ளிக்கல்வித்துறைக்கு மத்திய அரசு என்ன நிதி கொடுக்க வேண்டுமோ அதற்கான 90 சதவீத நிதியை கொடுத்தாகி விட்டது. பி.எம்.ஸ்ரீ திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறோம் அதனால் மூன்றாவது நான்காவது பங்கை கொடுங்கள் என்று சொல்லிவிட்டு அதற்கு பின்னர் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்றால் என்ன அர்த்தம். எந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டதோ அந்த திட்டத்திற்கு தான் நிதியை பயன்படுத்த வேண்டும் அதை பயன்படுத்த மாட்டோம் எனக் கூறுவது திமுகவின் தவறு.

ஒரு திட்டம் மத்திய அரசிடம் இருந்து வந்தால் அதை எடுத்துக் கொள்கிறீர்களா இல்லையா? அதனை ஆராய இவர்கள் எந்த குழுவும் அமைக்க முடியாது. மத்திய அரசு ஏற்கனவே கொடுத்த நிதியில் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கலாம்.

ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாது என கூறுவது திமுகவின் செயல் அற்ற திறன். தனியார் பள்ளிகளில் இந்தி கற்று கொடுக்கப்படவில்லையா?
அரசு பள்ளி மாணவர்களை மட்டுமே துன்பத்துக்கு உள்ளாக்கி வாய்ப்புகளை கெடுக்கிறார்கள்.

கார் ரேசிங் அவ்வளவு சீக்கிரமாக தொடங்க முடிகிறது. ஒரு புதிய கட்சி தொடங்கி மாநாடு நடத்துவதற்கு இடம் கேட்டால் கேள்வி கேட்கிறார்கள். 22 ம் தேதி வா, 23ம் தேதி வா என அலையவிடுகிறாராகள்.

திமுகவிற்கு 2026-யை பார்த்து பயம் வந்துவிட்டது. மாநாடு நடத்துவதில் இடம் கொடுப்பதில் என்ன பிரச்சனை. இந்த கருத்தை கூறுகிறேன் என்றால் விஜய்க்கு ஆதரவாக இருக்கிறேன் என்று இல்லை. விஜயின் கட்சியை தடுப்பது போல விஜயின் திரைக்காட்சியும் தடுக்கப்படுகிறது என கேள்வி பட்டேன்.

தம்பி விஜய்க்கு ஆதரவாக இருக்கிறேன் என்று இல்லை, புதிய கட்சி வரும்போது வரவேற்க வேண்டும். வரட்டுமே களத்தில் எல்லாரும் நிற்போம் யாருக்கு மக்கள் ஆதரவு தருகிறார்களோ தரட்டும். நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை மிகவும் வருத்தத்திற்குரியது. தமிழ்நாட்டில் தேவையே இல்லை என கூற முடியாது. எல்லாத் துறைகளிலும் இருக்கிறது. திரைத்துறையில் அதிகமாக இருக்கிறது. தமிழ் துறையில் சில பாடகிகள் நடிகைகள் பிரச்சனை இருக்கிறது என கூறி மாய்ந்து போனார்கள்.

கேரளாவை போன்று தமிழகத் திரைத் துறையிலும் பிரச்சினை இருக்கும் என்றால் அதற்கும் தீர்வு காண வேண்டும். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண் போலீஸ் அதிகாரி பிரச்சனையை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருக்கிறார் என்றால் காவல்துறையை பாதுகாப்பற்றும் தமிழகத்தில் இருக்கிறது என்றால் யாருக்குத்தான் பாதுகாப்பு இருக்கும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

அமைச்சர்கள் எல்லாம் உதயநிதி உதயநிதி என கூறுகிறார்கள். அமைச்சர் துரை முருகன் இதுதான் நேரம் என்று வெளிநாடு பயணம் சென்று விட்டார்.

நேற்று கர்நாடக முதல்வர் நிகழ்ச்சியில் மேயர் கைகட்டிக்கொண்டு பவ்யமாக இருக்கிறார். இன்றைக்கு வாய் மூடிய அரசு தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மிக மோசமான நிலையில் அரசு இருந்து கொண்டிருக்கிறது.

தங்களது தன்மானத்தை தன்னுரிமையை காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம் எனக் கூறும் திமுக அரசு தன்னுடைய தன்மானத்தை தன்னுரிமையை மற்ற மாநிலத்திற்கு விட்டுக் கொடுத்து வருகிறது எனத் தெரிவித்தார்.

Tags: DMK will ban Vijay's party and show! - Tamilisai Soundararajan
ShareTweetSendShare
Previous Post

காவலர்கள் குறித்து புகார் அளிக்க விரைவில் கட்டணமில்லா தொலைபேசி எண்! – அமைச்சர் நமச்சிவாயம்

Next Post

கிருஷ்ணா நதிக்கு வரும் வெள்ள நீரின் அளவு குறைந்தது!

Related News

மோடியின் ராஜதந்திரம் : இந்தியாவில் ரூ.6 லட்சம் கோடி முதலீடு செய்யும் ஜப்பான்!

அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதல் காட்சி – வெளியியிட்டார் இஸ்ரேல் பிரதமர்!

2038-ல் 2-வது பெரிய பொருளாதாரம் : அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முன்னேறும் இந்தியா!

சத்ய சாய் பாபா நூற்றாண்டு விழா : குமரி – புட்டபர்த்தி தொடர் ஓட்டம் தொடக்கம்!

மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம் – லால்பக்சா ராஜா விநாயகரை தரிசனம் செய்தார் ஜே.பி.நட்டா!

ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் 50-க்கும் குறைவான ஆயுதங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டது – ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி

Load More

அண்மைச் செய்திகள்

சேலம் மாவட்டத்தில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – 2000க்கும் மேற்பட்ட சிலைகள் கரைப்பு!

சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் கரைக்கப்பட்ட சிலைகள்!

தமிழ்நாட்டின் பொறுப்பு டிஜிபியாக பதவியேற்பு – வெங்கட்ராமன் கடந்து வந்த பாதை!

தமிழக சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் பொறுப்பேற்பு!

தற்சார்பு பாரதம் உருவாக சுதேசி பொருட்களுக்கு முன்னுரிமை அளிப்போம் – நயினார் நாகேந்திரன்

தமிழக பொறுப்பு டிஜிபி நியமனம் – அண்ணாமலை கண்டனம்!

குற்றாலத்தில் சீரான நீர்வரத்து – சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்த சீனாவுடன் இணைந்து செயல்படுவோம் : ரஷ்ய அதிபர் புதின் உறுதி!

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை – தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு!

நாகை மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies