திண்டுக்கலில் வ.உ.சி. பிறந்தநாள் மற்றும் கோபால் நாயக்கர் நினைவு நாள் என இருபெரும் தலைவர்களுக்கு பாஜக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சுதந்திர போராட்ட தியாகி வஉசி பிறந்த நாளையொட்டி, திண்டுக்கல் – திருச்சி சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, பாஜகவினர் ஊர்வலமாகச் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து, கோபால சமுத்திரக்கரையில் அமைந்துள்ள கோபால் நாயக்கரின் நினைவு தினத்தை ஒட்டி, அவரது திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.