அக்னிபாத் திட்டத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அக்னிபாத் திட்டத்தின் கீழ் முப்படையில் நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களைப் பணியமர்த்தும் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது. இந்தத் திட்டத்தின்படி, ராணுவத்தில் இணையும் வீரர்கள் நான்காண்டுகள் கழித்து பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.
தகுதி அடிப்படையில் 25 சதவீதத்தினருக்கு மட்டும் பணி நிரந்தரம் செய்யப்படும். முப்படையிலும் 40 ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்கள் அக்னிபாத் திட்டத்தின்கீழ் இணைந்து பணியாற்றி வரும் நிலையில், எதிர்க்கட்சியினரின் விமர்சனத்துக்கு மத்தியில், திட்டம் மாற்றியமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது.
இதனை மறுத்த பாதுகாப்புத் துறை அதிகாரிகள், அதுபோன்ற எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், கரடுமுரடான மலைப்பகுதியில் பணியாற்ற இளைஞர்கள் அதிகளவில் தேவை என்றும் தெரிவித்தனர்.