நீலகிரியில், வரும் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறுவதையொட்டி, உதகையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர் ஆகிய பகுதிகளில் இந்து முன்னணி, விஷ்வ இந்து பரிஷத் மற்றும் சிவசேனா சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் உதகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்ட கொடி அணிவகுப்பு நடைபெற்றது. அரசு தாவரவியல் பூங்கா சாலையில் தொடங்கி, மத்திய பேருந்து நிலையம் வரை கொடி அணிவகுப்பு நடைபெற்றது.