எந்த நிலையிலும் நாட்டின் அமைதியை சீர்குலைக்க முடியாது என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற கூட்டுத் தளபதிகள் மாநாட்டில் அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :
“இந்தியா எப்போதும் அமைதியை விரும்புகிறது. ஆனால் இன்றைய புவிசார் அரசியல் சூழ்நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவிலும் உலகிலும் அமைதியை நிலைநாட்ட இந்தியா எப்போதும் போருக்குத் தயாராக வேண்டும்” என்றார்
மேலும், ரஷ்ய – உக்ரைன் போரை மேற்கோள் காட்டி பேசிய ராஜ்நாத் சிங், ஆயுதப் படைகள் எப்போதும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என ராஜ்நாத்சிங் கேட்டுக்கொண்டார்.