தஞ்சாவூரில் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
பூதலூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 42 வயதான பெண், கடந்த 3-ஆம் தேதி வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது பூதலூரில் பேருந்துக்காக காத்திருந்த அவரை இருசக்கர வாகனத்தில் வந்த பிரவீன் என்பவர் லிப்ட் கொடுப்பதாக கூறி, தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.
இதனையடுத்து பிரவீனின் வாகனத்தை பின்தொடர்ந்து ராஜ்கபூர் என்ற நபரும் வந்துள்ளார். அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அப்பெண்ணை அழைத்துச் சென்ற இருவரும், பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் பிரவீன், ராஜ்கபூர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்ய முயன்ற போது இருவரும் தப்பியோட முயன்றதாகவும்,கீழே விழுந்ததில் இருவருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.