கோவை மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் விநாயகர் சிலைகளை கரைக்க ஏதுவாக, சகதிகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
மேட்டுப்பாளையம், அன்னூர், காரமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
மேட்டுப்பாளையம் சுப்பிரமணியர் கோவில் அருகே பவானி ஆற்றில் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த இடம் சேரும் சகதியமாக இருப்பதால் சகதிகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.