தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தருமபுரி மாவட்டத்தில் ஆயிரத்து 742 ஏக்கரில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
462 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் சிப்காட் மூலம் 18 ஆயிரத்து 300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்ற அமைச்சகத்திடம் விண்ணப்பித்து அனுமதி கோரியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.