விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறை நாளையொட்டி நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
நீலகிரிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் வார விடுமுறையை கொண்டாட நீலகிரிக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையை கண்டு ரசித்தனர்.
மேலும், இதமான காலநிலையை அனுபவித்த வண்ணம் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.