சிக்கிம் மாநிலத்தில் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் அவரது சொந்த ஊரான விருதுநகரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பாக்யோங்கில் கடந்த 5 ஆம் தேதி ராணுவ வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஹரியானா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இதில் கன்சாபுரத்தை சேர்ந்த சுபேதர் கே.தங்கபாண்டியன் என்ற வீரரும் உயிரிழந்த நிலையில் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.