பாரீஸில் நடைபெற்று வந்த பாரா ஒலிம்பிக் போட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது.
17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 28-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் 170 நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரத்து 463 வீரர், வீராங்கனைகள், 22 வகையான விளையாட்டுகளில் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
இந்திய அணியை பொறுத்தவரை, 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களை குவித்து, பதக்கப்பட்டியலில் 18-வது இடத்தை பிடித்தது. ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில், கண்கவர் கலை நிகழ்ச்சி, நடனம், வாணவேடிக்கை, சாகசங்களுடன் பாரா ஒலிம்பிக் போட்டி நிறைவு பெற்றது. நிறைவு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.