பாரிஸ் பாரா ஒலிம்க்கில் பதக்கம் வென்ற இந்திய குழுவினருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், “பாராலிம்பிக்ஸ் 2024 சிறப்பு வரலாற்று சிறப்புமிக்கது. இந்தியா சார்பில் பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்கள் 29 பதக்கங்களை வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்திய குழுவினர் சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தியுள்னர்.
இந்த சாதனைக்கு நமது விளையாட்டு வீரர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் அசைக்க முடியாத மனப்பான்மையே காரணம்” என பிரதமர் மோடி தெரிவித்துளளார்.