அதி நவீனமாகும் இந்திய ராணுவம் - பாதுகாப்பு தளவாட கொள்முதலுக்கு ரூ.1.44 லட்சம் கோடி ஒதுக்கீடு!
Aug 22, 2025, 12:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதி நவீனமாகும் இந்திய ராணுவம் – பாதுகாப்பு தளவாட கொள்முதலுக்கு ரூ.1.44 லட்சம் கோடி ஒதுக்கீடு!

Web Desk by Web Desk
Sep 12, 2024, 09:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

1.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்புத் தளவாடங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்புத் தளவாட கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.  அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் தேசியப் பாதுகாப்பை வலிமைபடுத்துவதையும், தேசத்தின் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்தியக் கடற்படைக்கு 70,000 கோடி ரூபாய் மதிப்பில், புதிய ஏழு மேம்பட்ட போர்க்கப்பல்களைத் தயாரிக்கவும் மற்றும் ராணுவத்துக்கு 50,000 கோடி ரூபாய் மதிப்பில்,1,700 புதிய நவீன ரக பீரங்கிகள் தயாரிப்பது உள்ளிட்ட பல பாதுகாப்புத் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இந்திய கடற்படையின் ப்ராஜெக்ட் 17 பிராவோ (Project 17 Bravo)என்ற திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ள முக்கிய திட்டங்களில் ஒன்றாகும்.

ஏற்கெனவே ,Mazagon Dockyards Limited (MDL) என்ற நிறுவனம் நான்கு போர்க்கப்பல்களை உருவாக்கி வருகிறது. மற்றும் Garden Reach Shipbuilders and Engineers (GRSE) என்ற நிறுவனம் 3 போர்க் கப்பல்களை தயாரித்து வருகிறது.

இந்நிலையில், (Project 17 Bravo) ப்ராஜெக்ட் 17 பிராவோவுக்கான ஏலத்தில் MDL, GRSE, கோவா ஷிப்யார்ட் மற்றும் லார்சன் & டூப்ரோ உள்ளிட்ட வகை நான்கு கப்பல் கட்டும் நிறுவனங்கள் பங்கேற்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், பீரங்கிகள் மற்றும் காலாட்படை போர் வாகனங்கள் உட்பட ராணுவத்தின் கவச வாகனங்களை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்திய இராணுவம், கடந்த 10 ஆண்டுகளில் தனது கவசப் படைகளைக் குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தி வருகிறது.

அந்த வரிசையில், இது வரை பயன்படுத்தி வந்த ரஷ்யாவின் T-72 பீரங்கிகளுக்குப் பதிலாக Future Ready Combat Vehicles (FRCVs) என்ற அழைக்கப் படும், அதிநவீன போர் வாகனங்களை வாங்குவதற்கு மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது.இதில் 60 சதவீதத்துக்கும் அதிகமானவை உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஏலத்தில் Bharat Forge (பாரத் ஃபோர்ஜ்) மற்றும் Larsen & Toubro (லார்சன் & டூப்ரோ) போன்ற நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாக தெரிய வருகிறது. இந்தியாவுக்கு எதிராக சீனா பலவகையான நடவடிக்கைகளை பொருளாதார மற்றும் இராணுவ ரீதியிலும் முன்னெடுத்து வருகிறது.

சீனா தனது விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் ஆகிய நாட்டின் உள்கட்டமைப்பை இராணுவ பயன்பாடுகளுக்காக மேம்படுத்தியுள்ளது. மேலும் சீனா தனது கடல் ஆதிக்கத்தை அதிகரித்து வருகிறது.

இலங்கையில் உளவு மற்றும் ஆராய்ச்சிக் கப்பல்கள், மியான்மரின் கிரேட் கோகோ தீவில் ஒரு விமான ஓடுதளம் நிக்கோபார் தீவுகளில் கடற்படை மற்றும் விமானப்படை தளங்கள்,மாலத்தீவில் நீருக்கடியில் நிலப்பரப்பு மேப்பிங் செய்யும் உளவுக் கப்பல் என இந்தியாவைக் கண்காணிக்கும் முயற்சிகளில் சீனா இறங்கியுள்ளது

அரேபிய கடலில் இந்தியாவின் கடல் எல்லையோரத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சீனா மற்றும் பாகிஸ்தான் கடற்படைகளுக்கு இடையேயான கூட்டு ராணுவப்பயிற்சி நடைபெற உள்ளது.

இதனிடையே  சீனா தனது மக்கள் விடுதலை இராணுவக் கடற்படையின் (PLAN) இராணுவத் தளத்தை ஜிபூட்டியில், எரிபொருள் நிரப்பும் வசதியிலிருந்து பழுது பார்ப்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கான மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பாக மாற்றியுள்ளது.

இந்தப் பின்னணியில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் The Defence Acquisition Council’ கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் 1.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்புத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Tags: Make in India' programstrengthening national securityprime minister modiDefense Procurement Councildefense equipmentRs 1.44 lakh crore
ShareTweetSendShare
Previous Post

ஓயாத போராட்டங்கள் ! : ஆட்டம் காணும் மம்தா அரசியல்?

Next Post

கொல்கத்தாவில் இளநிலை மருத்துவர்கள் தொடர் போராட்டம்!

Related News

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

உள்நாட்டு விமானப் போக்குவரத்து இலவசம் – சுற்றுலா பயணிகளை ஈர்க்க தாய்லாந்து நடவடிக்கை!

நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் – அமைச்சர் கிரண் ரிஜிஜு

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies