பெண் மருத்துவரின் பாலியல் வன்கொடுமை படுகொலை வழக்கில் நீதி வழங்கக்கோரி கொல்கத்தாவில் இளநிலை மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண் மருத்துவர் கொலை வழக்கில் செப்டம்பர் 10ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மருத்துவர்கள் பணிக்கு திரும்புமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு பணியை புறக்கணிக்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை பாயும் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், கொல்கத்தாவில் இளநிலை மருத்துவர்கள் கடந்த 2 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெண் மருத்துவரின் கொலைக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என இளநிலை மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.