ஆசிரியர் பணியிட விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மனை எதிர்த்து திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களிடம் அபிஷேக் பானர்ஜியும், அவரது மனைவி ருஜிரா பானர்ஜியும் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையொட்டி, டெல்லியில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத் துறையினர் சம்மன் அனுப்பினர்.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த அவர், கொல்கத்தாவில் விசாரணைக்கு ஆஜராவதில் தனக்கு ஆட்சேபமில்லை என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அதைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.