மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிய பாஜகவை விமர்சிக்க ராகுல் காந்திக்கு தார்மீக உரிமை இல்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், பழங்குடியின பெண் குடியரசுத் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சி தமது தாய், தமது பாட்டியை மட்டுமே பெண் தலைவர்களாக கருதுகிறது என பதிவிட்டுள்ளார்.
பாஜக ஆட்சியில் பாதுகாப்பு, நிதி உள்ளிட்ட சவால்களான இலாகாக்கள் பட்டியலின பெண்களால் நடத்தப்பட்டதாகவும் தமிழிசை கூறியுள்ளார்.