டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் முதலாவது நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
தேசிய கல்விக்கொள்கை பரிந்துரையின்பேரில் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்களில் ஆய்வையும் புத்தாக்கத்தையும் ஊக்குவிக்கும் வகையில் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டது.