நாட்டின் வளர்ச்சிக்கு சில தீய சக்திகள் இடையூறு ஏற்படுத்துவதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், இந்தியா மேம்பாடு அடைவதை விரும்பாத சில சக்திகள், வளர்ச்சிப் பாதையில் இடையூறு விளைவிப்பதாக குற்றம் சாட்டினார்.
இதேபோன்ற சூழ்நிலை சத்ரபதி சிவாஜி ஆட்சிக்காலத்திலேயே இருந்ததாகவும், தர்மத்தின் அடிப்படையில் அதை அவர் வெற்றி கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வெறும் பூஜை புனஸ்காரம் மட்டுமே தர்மம் அல்ல என்று கூறிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உண்மை, கருணை, அர்ப்பணிப்பு ஆகிய பரந்த கருத்தாக்கமே தர்மம் என விளக்கமளித்தார்.
குறிப்பிட்ட நோக்கத்தை அடைவதற்காகத்தான் இந்திய தேசம் உருவானது என்றும், உலகமே ஒரு குடும்பம் என்ற கொள்கையை பாரதம் முன்மொழிவதாகவும் மோகன் பகவத் குறிப்பிட்டார்.