புதுக்கோட்டை அருகே புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை – ஆலங்குடி சாலையில் அசோக் நகர் பேருந்து நிறுத்தம் அருகே அரசு மதுபான கடை எஃப் எல் 2 என்ற பெயரில் நவீன மயமாக்கப்பட்ட மதுபான பார் திறப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், புதிய மதுபானக் கடை திறப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சென்ற போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
















