இமாச்சலில் நீடிக்கும் பதற்றம்! : சர்ச்சைக்குரிய மசூதியை உரிமை கோரும் வக்ஃப்!
Aug 22, 2025, 06:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இமாச்சலில் நீடிக்கும் பதற்றம்! : சர்ச்சைக்குரிய மசூதியை உரிமை கோரும் வக்ஃப்!

Web Desk by Web Desk
Sep 11, 2024, 08:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் மசூதியை 15 நாட்களுக்குள் இடிக்க வேண்டும் என்று உள்ளுர் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வக்பு வாரியம் ஆக்கிரமித்துள்ள சொத்துகளை அரசு கையகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

சிம்லாவில் கட்டப்பட்டுள்ள சஞ்சௌலி மசூதி விவகாரம் கடந்த 14 ஆண்டுகளாக நீறுபூத்த நெருப்பாக இருந்து வந்தது. கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி, மசூதிக்கு அருகிலுள்ள மலியானா பகுதியில் ஒரு தொழிலதிபர் மீது சில முஸ்லிம் இளைஞர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, சஞ்சௌலி மசூதிக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

சௌரா மைதானத்தில், இந்து அமைப்புகள் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில், தேசியக் கொடியை ஏந்திய படி நடந்த ஆண்களும், பெண்களும் பெருமளவில் கலந்து கொண்டனர். சஞ்சௌலியில் உள்ள சட்ட விரோத மசூதியை இடிக்க வேண்டும் என்றும் போராட்டக் குழுவினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஹிந்து ஜாக்ரன் மஞ்சின் ஹிமாச்சல் பிரிவின் தலைவரான கமல் கவுதம், எல்லை தாண்டி வந்த அந்நியர்களுக்கு அடைக்கலம் கொடுக்க சஞ்சௌலி மசூதி பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

மேலும், இந்த விவகாரம் மாநில சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. ஊரக வளர்ச்சி அமைச்சர் அனிருத் சிங், அரசு நிலத்தில் இருக்கும் மசூதி இடிக்கப்பட வேண்டும் என்று கூறியதோடு, இந்து அமைப்புக்களுக்கு ஆதரவாகவும் சட்டமன்றத்தில் குரல் கொடுத்திருந்தார்.

1960ம் ஆண்டு முதல் சஞ்சௌலி மசூதி உள்ளது என்ற குற்றச்சாட்டை நிராகரித்த அமைச்சர், 2010ம் ஆண்டில் தான் கட்டுமான பணி தொடங்கியது என்றும், அதற்கான அனைத்து அரசு ஆவணங்களையும் சட்டசபையில் சமர்ப்பிப்பதாக தெரிவித்தார். மேலும், 2019ம் ஆண்டில் சட்டவிரோதமாக நான்கு கூடுதல் தளங்களும் அந்த மசூதியில் கட்டப்பட்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.

ஆக்கிரமித்து மசூதி கட்டியவர்கள் மீது அரசு மெத்தனமாக இருக்காது என பொதுப்பணித்துறை அமைச்சர் விக்ரமாதித்ய சிங் பதிலளித்திருக்கும் நிலையில், முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவும், சர்ச்சைக்குரிய மசூதி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான ஜெய் ராம் தாக்கூர், இது மதப் பிரச்சினை அல்ல என்றும், சட்டவிரோத மசூதிக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.

இந்நிலையில், சஞ்சௌலியில் சர்ச்சைக்குரிய மசூதி தங்களுக்குச் சொந்தமானது என்று வக்ஃப் வாரியம் கடந்த சனிக்கிழமை சிம்லா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஓற்றை மாடி மசூதி எப்படி ஐந்து மாடிக் கட்டிடடமாக மாறியது என்பது குறித்த அறிக்கையை சமர்பிக்கும்படி வக்ஃப் வாரியத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, சஞ்சௌலி உள்ளூர்வாசிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜகத் பால், மசூதி கட்டப்பட்டுள்ள நிலம் மாநில அரசின் வருவாய்த் துறைக்கு சொந்தமானது என்றும், வக்பு வாரியம் அந்நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளது என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள மசூதியில் இருக்கும் இஸ்லாமிய மதத்தினரால் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் விளக்கமாக குறிப்பிட்டு நீதிமன்றத்தில் உள்ளூர்வாசிகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய சஞ்சௌலி வழக்கு தொடர்பான 45வது விசாரணை நடந்துமுடிந்த நிலையில் அடுத்த விசாரணையை வரும் அக்டோபர் 5 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சமீபகாலமாக ஹிமாச்சல் பிரதேசத்தில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், ரோஹிங்கியர்கள் மற்றும் வங்கதேசத்தினர் சட்ட விரோதமாக குடியேறி இருப்பதாகவும்,தெரிவிக்கும் உள்ளுர் மக்கள், மாநிலத்தில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் மீது முறையான விசாரணை நடத்தப் பட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

Tags: Tension continues in Himachal! : Waqf Claiming Disputed Mosque!
ShareTweetSendShare
Previous Post

பன்முகப் படைப்பாளி மகாகவி பாரதியார் நினைவை போற்றுவோம்!

Next Post

ஓயாத போராட்டங்கள் ! : ஆட்டம் காணும் மம்தா அரசியல்?

Related News

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

உள்நாட்டு விமானப் போக்குவரத்து இலவசம் – சுற்றுலா பயணிகளை ஈர்க்க தாய்லாந்து நடவடிக்கை!

நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் – அமைச்சர் கிரண் ரிஜிஜு

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies