கோட் திரைப்படத்தில் ஏ.ஐ தொழில்நுட்பத்தில் அப்பா வந்த காட்சிகளை ஒவ்வொரு நொடியும் பார்த்து மகிழ்ந்ததாக விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
தேனியில் உள்ள தனியார் திரையரங்கில் விஜய் நடித்த கோட் திரைப்படத்தை மறைந்த நடிகர் விஜயகாந்த் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் மற்றும் சரத்குமார் ஆகியோர் இணைந்து பார்த்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய பிரபாகரன், ஏ.ஐ தொழில்நுட்பத்தில் அப்பா வந்த காட்சிகளை பார்த்துக் கொண்டே இருந்ததாக கூறினார்.
விஜயகாந்த் வந்த காட்சியை வெங்கட் பிரபு சிறப்பாக இயக்கியுள்ளதாகவும், விஜய்யும் நன்றாக நடித்துள்ளதாகவும் கூறினார்.
மேலும், தங்களிடம் அனுமதி பெற்றுதான் கோட் திரைப்படத்தில் விஜயகாந்தை ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
















