நில மோசடி வழக்கில், கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் எம்.ஆர்.சேகர் திருச்சி மத்திய சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார்.
கரூரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் 100 கோடி ரூபாய் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரிக்க முயன்ற வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட சிலரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தநிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய விஜயபாஸ்கரின் சகோதரர் எம்.ஆர்.சேகரை போலீசார் கைது செய்னர்.
கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், அவருக்கு வரும் 25 -ஆம் தேதி வரை காவல் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, திருச்சி மத்திய சிறையில் எம்.ஆர்.சேகர் மீண்டும் அடைக்கப்பட்டார்.