வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து அவ்வப்போது உலக நாடுகளுக்கு வடகொரியா அதிர்ச்சி கொடுத்து வருகிறது.
அமெரிக்கா மற்றும் எதிரி நாடுகளை சமாளிக்க அணு ஆயுதப்படை தயார் நிலையில் இருப்பதாக வடகொரிய அதிபர் கிம் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
அதிகாலை பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி வடகொரியா சோதனை நடத்தியதாகவும், வடகிழக்கு கடல் பகுதியில் ஏவுகணை விழுந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. வடகொரியாவின் ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.