வியட்நாமில் யாகி புயலின் தாக்கத்தால் மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
பிலிப்பைன்சில் உருவான யாகி புயல் சீனாவை தொடர்ந்து வியட்நாமை மிரட்டியது. வடக்கு வியட்நாமின் குவாங் நின், ஹைடாங் மற்றும் ஹோ பின் ஆகிய கடலோர மாகாணங்களை யாகி புயல் தாக்கியது.
இதன் காரணமாக நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், தற்போது குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.