உக்ரைனுக்கு மேலும் 700 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் இரண்டரை ஆண்டுகள் கடந்தும் நீடித்து வருகிறது. இந்த போரில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் உக்ரைன் சென்றுள்ளார்.
அப்போது, மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனின் மின்சாரம், கல்வி, சுகாதாரம் ஆகிய அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு அமெரிக்கா 700 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.