தென்சென்னை தொகுதிக்குப்பட்ட பகுதிகளில் பூத் வாரியாக உறுப்பினர்களை சேர்ப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில், உறுப்பினர் சேர்க்கை தொடர்பான இணைய வழி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன்
நிர்வாகிகளுக்கு பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.
அதில், தென்சென்னை தொகுதியில் பூத் வாரியாக 200-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை சேர்க்கும் நிர்வாகிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் என அறிவித்தார்.