கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.
தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த யாசர் ஹராபத், மயிலாடுதுறையை சேர்ந்த முகமது அன்வர் உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர், காரில் சென்னைக்கு வந்துவிட்டு மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்துகொண்டிருந்த லாரி மீது வேகமாக மோதியது.
இதில் காரில் பயணித்த 5 பேரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் 5 பேரின் உடல்களையும் மீட்டு தலைமறைவாக உள்ள லாரி ஓட்டுநர் மற்றும் உதவியாளரை தேடி வருகின்றனர்.