உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வடலூர் சத்திய ஞான சபையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு தமிழக அரசு அடிக்கல் நாட்டியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் பெருவெளி பகுதியில் தோண்டப்பட்ட பள்ளங்களை சுற்றி வேலி அமைக்குமாறும் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.