சங்கரன்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் தாக்கியதில் படுகாயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கழுகுமலை சாலையில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 11 ம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவரை பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் பாதிக்கப்பட்ட மாணவர் படு காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.