சென்னை எண்ணூர் முகத்துவாரதில் ஆறும், கடலும் கலக்கும் இடத்தில் ஆற்று நீர் மஞ்சள் நிறமாக காணப்பட்டதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
சென்னை எண்ணூர் சுற்று வட்டார பகுதிகளில் இயங்கி வரும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் காலம் காலமாக கடலில் கலக்கும் அவலம் அரங்கேறி வருகிறது. இதனால் இறால், நண்டு மற்றும் ஆளிவகை மீன்கள் அழிவின் விளிம்பில் இருப்பதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் சுற்றுச்சூழல் அதிகாரிகள் எந்தவொரு அறிவிப்பும் வெளியிடாமல் வெறும் கண் துடைப்புக்கு மட்டுமே பார்வையிட்டு செல்வதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.