ஓணம் மற்றும் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு உதகை முதல் கேத்தி வரை சிறப்பு மலை ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை உள்ள அழகிய மலை முகடுகளையும், இயற்கை காட்சிகளையும் கண்டு ரசிக்க ஏதுவாக மலை ரயில் சேவை இயக்கப்படுகிறது.
உதகையில் இரண்டாம் கட்ட சீசன் தொடங்கியுள்ள நிலையில், மலை ரயில் சிறப்பு சேவைகளை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, குன்னூரிலிருந்து உதகைக்கு காலை 8.20 மணிக்கும், மாலை 4.45 மணிக்கு உதகையிலிருந்து குன்னூர் வரை என இருமுறையும் மலை ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உதகை முதல் கேத்தி வரை காலை 9.45 மற்றும் 11.30 மணிக்கும், மாலை 3.00 மணிக்கும் சிறப்பு மலை ரயில் சேவை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.