மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி மறைவு!
Mar 20, 2026, 03:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி மறைவு!

Murugesan M by Murugesan M
Sep 12, 2024, 06:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி காலமானார்.

நுரையீரல் தொற்று காரணமாக கடந்த மாதம் எய்ம்ஸ் மருத்துவமனையில் சீதாராம் யெச்சூரி அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவருக்கு கண்புரை அறுவை சிகிச்சையும் நடைபெற்றது.

இந்த நிலையில், சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்ட அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. தொடர்ந்து, யெச்சூரியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால், அவர் பிற்பகல் 3.05 மணிக்கு உயிரிழந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்தது. அவரது உடலை எய்ம்ஸ் மருத்துவமனையின் ஆய்வக பிரிவுக்கு ஆராய்ச்சி படிப்புக்காக ஒப்படைப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

72 வயதான சீதாராம் யெச்சூரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக கடந்த 2015-இல் பொறுப்பேற்றார். தொடர்ந்து மூன்று முறை அக்கட்சியின் பொதுச் செயலராக அவர் தேர்வானார். ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட யெச்சூரி, சென்னையில் கடந்த 1952-இல் பிறந்தார்.

கடந்த 2005 முதல் 2017-ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக சீதாராம் யெச்சூரி பொறுப்பு வகித்தார். சீதாராம் யெச்சூரிக்கு இந்திராணி மஜூம்தார், சீமா சிஸ்டி ஆகிய இரண்டு மனைவிகள் உள்ளனர். இந்நிலையில் அவரது மகன் ஆசிஸ் யெச்சூரி கொரோனா தொற்றால் கடந்த 2021-ஆம் ஆண்டில் தனது 34-ஆவது வயதில் உயிரிழந்தார்.

சீதாராம் யெச்சூரி மறைவைத் தொடர்ந்து டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் கட்சிக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. இதேபோல நாடு முழுவதும் அக்கட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.

Tags: Marxist Communist General Secretary Sitaram Yechury passed away!
ShareTweetSendShare
Previous Post

கல்வித்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்! – தமிழிசை செளந்தரராஜன்

Next Post

சீதாராம் யெச்சூரி கடந்து வந்த பாதை!

Related News

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

Load More

அண்மைச் செய்திகள்

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies