அன்னபூர்ணா உரிமையாளர் தாமாகவே முன் வந்து வருத்தம் தெரிவித்ததாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
“தமிழ்நாட்டில் விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். இது தொடர்பாக வரும் 17-ம் தேதிக்குள் முடிவு எடுக்க வேண்டும். இல்லையென்றால் பாஜ சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
நேற்று முன்தினம் மத்திய நிதி அமைச்சர் தொழில்துறையினரை சந்தித்து அவர்களது பிரச்னைகளை கேட்டறிந்தார். அப்போது அன்னபூர்ணா உரிமையாளர், இனிப்பு, காரம் ஜிஎஸ்டி தொடர்பாக நிதி அமைச்சரிடம் கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் மீண்டும் ஓட்டலுக்கு வந்த அன்னபூர்ணா உரிமையாளர், நிதி அமைச்சரை சந்தித்து தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். அந்த இடத்தில் பாஜக தவிர பல கட்சியை சேர்ந்தவர்கள் இருந்தார்கள். யார் வேண்டுமானாலும் வீடியோவை வெளியிட்டு இருக்கலாம்” என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.