ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கும் 3 குடும்பங்களுக்கு இடையே தேர்தல் நடைபெறுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் தோடாவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது :
நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து, ஜம்மு காஷ்மீர் அந்நிய சக்திகளால் குறிவைக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு, இந்த அழகான மாநிலத்தை ‘பரிவார்வாத்’ குழிதோண்டிப் புதைக்கத் தொடங்கியது.
நீங்கள் நம்பியிருக்கும் அரசியல் கட்சிகள் உங்கள் பிள்ளைகளை மட்டும் பொருட்படுத்தவில்லை 2000க்குப் பிறகு இங்கு பஞ்சாயத்துத் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பது உங்களுக்குத் தெரியும்.
இதுவரை இளைஞர்களை முன்வர விடவில்லை அதனால்தான் 2014ல் ஆட்சிக்கு வந்த பிறகு ஜம்மு காஷ்மீரில் இளைஞர்களின் புதிய தலைமையை கொண்டு வர முயற்சி செய்தேன்.
பின்னர் 2018ல் இங்கு பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. 2019 இல், BDC தேர்தல்கள் நடத்தப்பட்டன, எதற்காக இந்தத் தேர்தல்கள் நடத்தப்பட்டன? ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் அடிமட்டத்தை சென்றடையும் வேண்டும் என்பதற்காக தேர்தல்கள் நடத்தப்ட்டன.
இம்முறை சட்டசபைத் தேர்தல் மூன்று குடும்பங்களுக்கும் ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கும் இடையே நடைபெறுகிறது. ஒரு குடும்பம் காங்கிரஸ், ஒரு குடும்பம் தேசிய மாநாட்டு கட்சி, மற்றொரு குடும்பம் மக்கள் ஜனநாயக கட்சி.
இங்கு அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காலம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அந்த நாள் முடிந்தது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசின் உள்துறை அமைச்சர் கூட லால் சௌக்கிற்குச் செல்ல பயப்படும் அளவுக்கு நிலைமை இருந்தது. தற்போது ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் ஒடுக்கப்பட்டு அமைதி நிலவுகிறது.
ஒன்றாக இணைந்து பாதுகாப்பான மற்றும் வளமான ஜம்மு-காஷ்மீரை உருவாக்குவோம், இது மோடியின் உத்தரவாதம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.