மதுரையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விசிக கொடியை போலீசார் அகற்றினர்.
மதுரை மாநகர் புதூர் பேருந்து நிலையம் அருகே விசிகவினர் 60 அடி உயரத்திற்கு புதிதாக கொடிக் கம்பம் ஒன்றை நட்டனர். இதுகுறித்து எந்தவித அனுமதியும் முறையாக பெறவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ அளித்த புகாரின் பேரில், மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவின் கீழ் இரவோடு இரவாக போலீசார் கொடி கம்பத்தை அகற்றினர். அப்போது போலீசாருக்கும், விசிகவினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
விசிக தலைவர் திருமாவளவன் அக்கொடியை ஏற்றிவைக்க திட்டமிட்டிருந்த நிலையில் கொடிக்கம்பம் அகற்றப்பட்ட சம்பவம் திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.